இந்த குழந்தை கேட்கும் கேள்விக்கு ஒரு அம்மாவால் பதில் கூற முடியுமா? வேலைக்குப் போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள். நம்ம வீட்டு பீரோ சாவிய வேலைக்காரிக்கிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல? அதைப் போய் வேலைக்காரிக்கிட்ட கொடுப்பாங்களா? நம்ம வீட்டு பீரோல இருக்கிற நகை, பணம் எல்லாம் வேலைக்காரிக்கிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல? அதையெல்லாம் கொடுக்கக்கூடாது. வேலைக்காரிக்கிட்ட உங்க ATM Card-ஐ ஏம்மா கொடுத்துட்டுப் போகல? என்ன கேள்வி இது? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருட்கள், வேலைக்காரிக்கிட்ட கொடுக்கக்கூடாது. அதையெல்லாம் அப்போ ஏம்மா என்னை மட்டும் வேலைக்காரிக்கிட்ட விட்டுட்டுப் போறீங்க?.
[image]. கர்மா நம் வாழ்க்கையில் மறைமுகமாக நம்முடனே பயணித்து எதிர்பாராத நேரத்துல கொடுக்குறது தான் கர்மா. அதன் அடிப்படையாக இருக்கும் விதிகள் இப்பொழுது பார்க்கலாம் இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும் அது நமக்கே திரும்பி வந்து சேரும் என்பது முதல் விதி வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை நமக்கு தேவையானதை நாம் தான் நடத்திச் செல்ல வேண்டும் இரண்டாவது விதி சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும் மூன்றாவது விதி நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் நான்காவது விதி நம் வாழ்வில் நிகழ்பவைக்கு நாமே பொறுப்பு என்று உணர வேண்டும் ஐந்தாவது விதி நேற்று இன்று நாளை என இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதே ஆறாவது விதி ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களை சிந்திக்க முடியாது ஏழாவது விதி நம் நடத்தை நமது சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும் எட்டாவது விதி நம்முடைய பின்காலத்தையே நாம் பார்த்து கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டு போய் விடும்..
கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை. கடைசியில் நமக்கென்று வருவது நமது பெற்றோர்கள் மட்டும் தான். ஏழையாக இருப்பவருக்கு, நண்பர்களும் குறைவாகவே இருப்பார்கள். மனிதர்கள் விரும்புவது அழகிய குணத்தையல்ல, அழகிய உருவத்தை. மரியாதையை கிடைப்பது உங்களுக்கல்ல, உங்கள் பணத்துக்கு அல்லது உங்களிடமுள்ள செல்வத்துக்கு. நீங்கள் அதிகம் நேசிப்பவர்களே உங்களை அதிகம் காயப்படுத்துவார்கள்..
ஒரு நிமிட கதை ஒரு முதியவர் தன் செல்போனை சர்வீஸ் செய்ய கொண்டு போனார். செல்போன் சரி செய்பவர் அந்த போனை வாங்கி பார்த்துவிட்டு அய்யா போன் நல்லாதானே இருக்கு எதுக்கு கொண்டு வந்திங்கனு கேட்டார். அதற்கு பெரியவர் அந்த போனை கண்ணீருடன் வாங்கிக்கொண்டு, அப்புறம் ஏன் என் பசங்க போன் பண்ண மாட்டேங்கிறாங்க என்றாராம். நண்பர்களே, நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி பெற்றோர்க்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்..
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். "இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்". முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்..
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான். உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.
உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர் மரத்தடியில் தியானத்தில் இருந்தார். எளிமையான அவரது முகம் தாமரை போல மலர்ந்திருந்தது கண்டதும் அவர் ரதத்தை நிறுத்தினார். கண்களைத் திறந்த அந்த மனிதர், 'என்ன வேண்டும்?' எனக் கேட்டார். "காசியின் மன்னர் நான்! செல்வம் எல்லாம் இருந்தும், ஏதுமில்லாதது போல மனம் வாடுகிறேன். எளிமையாக இருந்தாலும் உங்களின் பிரகாசமான முகம் என்னை ஈர்க்கிறது. சாக முடிவெடுத்த நிலையிலும், உங்களிடம் சற்று நேரம் பேசத் தோன்றுகிறது. அதனால் நின்று விட்டேன்" என்றார் மன்னர். மன்னரின் பேச்சைக் கேட்டாலும், அந்த மனிதரின் பார்வை முழுவதும் மன்னரின் கால்களை நோக்கியிருந்தது. மன்னருக்குச் சிறுவயது முதல் கால் களை ஆட்டும் பழக்கம் உண்டு. அந்த மனிதர் தனது கால்களையே பார்க்கிறார் என்பதை அறிந்ததும் சட்டென அசைப்பதை நிறுத்தினார் மன்னர். "மன்னா! எவ்வளவு காலமாக இந்த பழக்கம்.
உன்னை நீயே கவனி உள்ளது?" எனக் கேட்டார் அவர். 'நினைவு தெரிந்த நாள் முதல்..." என்றார். "இப்போது ஏன் நிறுத்தி விட்டாய்?" என்று கேட்டார் அவர். * நீங்கள் என் கால்களையே உற்று கவனித்தீர்கள்" என்றார். "பார்த்தாயா! மற்றவர் உன்னைக் கவனிக்க வேண்டுமென கருதுகிறாய். பிறரைச் சார்ந்தே வாழ ஆசைப்படுகிறாய். உலகத்தைப் பற்றி கவலைப்படாதே. உன் கால்களை நான் கவனித்ததால், நீண்டநாள் பழக்கத்தைக் கூட நிறுத்தி விட்டேன் என்கிறாய். இனி உன்னை நீயே கவனிக்க தொடங்கு. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது தெரிய வரும்" என்றார். மன்னரின் மனதில் ஒளிக்கீற்று படர்ந்தது. பணிவோடு, "தாங்கள் யார்?" என்று கேட்டார். "புத்தர்" என்றார் அந்த மனிதர் காலில் விழுந்து வணங்கினார். தன்னைத் தானே கவனிப்பதே வாழும் கலை என்பதை அறிந்ததும், மன்னரின் ரதம் அரண்மனை நோக்கி திரும்பியது.
யார் முட்டாள்? கௌதம புத்தர் தனது சிஷ்சியரான ஆனந்தாவுடன் பிட்ஷை எடுக்கபோனார். ஒரு வீட்டில் பிட்ஷை கேட்ட போது ஒரு பெண் முட்டாளே உனக்கு பிட்ஷை எடுக்க வெட்கமாக இல் லையா..?” என்று பலவாறு திட்ட தொடங்கினாள். ஆனந்தருவுக்கு மிகவும் கோபம் வந்தது. அந்த பெண்ணை திட்ட முயன்றார். புத்தர் ஆனந்தாவை தடுத்து அவ்விடத்தில் இருந்து எதுவும் பேசாது விலகி வந்த பிறகு, தனது திருவோட்டை ஆனந்தாவிடம் கொடுத்து "இதை மாலைப்பொழுதில் திருப்பி கொடு..!” என்றார். மாலைபொழுது வந்ததும் ஆனந்தா புத்தர் கொடுத்த திருவோட்டை திருப்பி கொடுத்தார். அதற்கு புத்தர் ”இல்லை இதை நீயே எடுத்து கொள்..!"என்றார். இரவானதும் தூங்கச்செல்லும் முன் ஆனந்தாவை பார்த்து "இந்த திருவோடு யாருடையது..?” என்று கேட்டார் "என்னுடையது..!" என்றார் ஆனந்தர். ஆனந்தா.. அது எப்படி எனது திருவோடு.
யார் முட்டாள்? உனது ஆனது..? எனகேட்டார். "நான் திருப்பி தரும்போது நீங்கள் ஏற்க மறுத்து விட்டீர்கள் அதனா ல் என்னுடையது ஆனது..!" என்றார் ஆனந்தர். இதே போல் தான், அந்த பெண் திட்டிய வார்த்தைளை நான் வாங்கி கொள்ளவில்லை. அதனால் அந்த வார்த்தைகள் அவளிடமே போய் சேர்ந்தது..!" என்றார் புத்தர். சொல்லால் மட்டும் அல் லாமல் செயலாலும் புரியவைத்தார் புத்த பெருமான். யாராவது நம்மை முட்டாள் என கூறினால் அதை ஏற்றுகொண்டு தான் கோபப்பட்டு அதை உறுதி செய்வதற்கு வாதம் செய்து கொண்டிருப்பதை நாம் உணர்வதே இல்லை..
வருவது வரட்டும் சமாளிப்போம்..!! ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும். நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர்.
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். "சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?" என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், "நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது.
மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது," என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர். வருவது வரட்டும் சமாளிப்போம்..!!.
அன்பான குணம் கொள்வோம்! ஒரு காட்டில் பறவை ஒன்று தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. அந்த வழியே சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் நரிகள் சென்றது. பின்பு ஆடு, மாடு எல்லாம் சென்றது. இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டே பறவை தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியே மனிதன் ஒருவன் வந்தான். பறவை உடனே பறந்து சென்றது. இது தினமும் நடந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் மனிதன் பறவையிடம் கேட்டான் அனைத்து மிருகங்கள் செல்லும்போது தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருக்கிறாய். என்னை பார்த்தவுடன் ஏன் பறந்து செல்கிறாய் என்று. அதற்கு பறவை சிங்கம்,புலி,சிறுத்தை இவைகளின் குணம் கொள்வது. நரியின் குணம் ஏமாற்றுவது மாடு, ஆடுகளின் குணம் முட்டுவது.அவைகள் அவைகளின் குணத்தில் இருந்து மாறாது. ஆனால், நீயோ மனிதன். எப்போது எப்படி உன் குணத்தை மாற்றுவாய் என்பது தெரியாது. அதனால் தான் உன்னை பார்த்து பயந்து பறக்கிறேன் என்றது!.
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் ? ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர். புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம் தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு. நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார். "உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்".
கதை படிப்போம் ஒரு காலை நேர.. நடைப்பயணத்திற்கு பிறகு. ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை, அவர்கள் கண்டார்கள். ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து: அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.. என்றார். இரண்டாவது மருத்துவர்; இல்லை.. 'அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .என்றார். மூன்றாவது மருத்துவர்: அவருக்கு, 'ஒரு கணுக்கால் சுளுக்கு .. என்றார். நான்காவது மருத்துவர்: அந்த 'மனிதனால் முழங்காலை தூக்க முடியாது. அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .. என்றார். ஐந்தாவது மருத்துவர்: 'ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது.' என்றார். ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு.
கதை படிப்போம் முன்பு... அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது. அதை சரி செய்யக்கூடிய செருப்பு தெய்ப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?' என கேட்கிறார். தற்போது எல்லா டிவி, சோசியல் மீடியாக்களில் வல்லுனர்கள் என, கொரானா வைரஸ் பற்றியும், மற்ற நாட்டு நடப்புகளை பற்றியும் வந்து பேசுபவர்கள். இந்த டாக்டர் குழு மாதிரி தான் பேசுகிறார்கள். அதையும் கேட்டு கொண்டு இருப்பது மக்களாகிய நமது விதி...
அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழுங்கள் எறும்பு பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை. நாய் சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை. யானை ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை. காகம் குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை. சிற்பம் போல் சாதாரண கருங்கல் இல்லை.....!!! நாற்காலி போல் கட்டில் இல்லை.....!!! ஒரு மரத்தின் பழங்களிலேயே ஒன்று போல் மற்றொன்று இல்லை.....!!! ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே ஒருவர் போல் மற்றொருவர் இல்லை.
அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழுங்கள் ஆண் உடல் போல் பெண்ணுடல் இல்லை.....!!! நேற்று போல் இன்று இல்லை.....!!! இன்று போல் நாளை இல்லை......!!! அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது!!! நீ மட்டும் ஏன் பொறாமைப்படுகிறாய்....??? • நீ என் அடுத்தவரைப் பார்க்கிறாய்.....??? நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்......??? நீ ஏன் வருந்துகிறாய்......???.
அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழுங்கள் நீ ஏன் ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......??? உன் வாழ்க்கை விசேஷமானது.....!!! நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க முடியாது .....!!! நீ அடுத்த வருடைய பசிக்கு சாப்பிட முடியாது .....!!! நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ முடியாது .....!!!.
குட்டிக்கதை ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை.
குட்டிக்கதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!???.
பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட போது... தன்னுடைய மருத்துவருக்கு போன்செய்து, நெஞ்சுவலி அதிகமா இருக்கு, எனவே தன் வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார். அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர், எனவே தன்னால் வரமுடியாது. ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியதுதானே? என்றார். ஷா, 'தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை', 'காபி போட்டு குடிக்க முடியவில்லை', 'தொடர்ந்து நிற்கவே முடியவில்லை' என்றார். சரியென்று மருத்துவரும் பெர்னார்ட்ஷா வீட்டிற்கு வந்தார்.. மாடியில் தங்கியிருந்த ஷாவைப் பார்க்க படியேறிவந்தார். ஷாவைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப்.
பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார். அதைப்பார்த்து பதறிப்போன ஷா எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்ட படி நின்றார். டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார்.. ஷா, சிரித்துக் கொண்டே டாக்டரைப் பார்த்து, என்னப்பா டாக்டர் இது? எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து நான்தானே பணிவிடை செய்தேன். எனக்கே பில் எழுதி தருகிறாயே? எனக்கேட்டார். அதற்கு டாக்டர் உங்களுக்கு பார்த்த வைத்தியக்குத்தாங்க இந்த ஃபீஸ் என்றார். மீண்டும் டாக்டர் சொன்னார்.. போனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள்.. 'எழுந்து நடக்க முடியவில்லை' என்றீர்கள். இப்போ ஓடோடி.
வந்தீர்கள். 'உங்களுக்கே காபி போட்டுக்கொள்ள முடியவில்லை' என்றீர்கள். இப்ப எனக்கும் காபி போட்டு தந்தீங்க. 'தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு" சொன்னீங்க. இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள் உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள்; அதனால் அவை பெரிதாக தெரிந்தன. இப்போ எனது கஷ்டத்தைப் பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்துவிட்டது என்றார். கஷ்டமும் அனுபவம் தான்....
வாழ்வில் உயரச் சில வழிமுறைகள் எதிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக் காதீர்கள். பிறர் எதிரில் உணர்ச்சி வசப்படாதீர்கள் பிறர் நிறையப் பேச அமைதியாகக் கேளுங்கள். மற்றவர்களின் செய்கைகளைப் பாராட்டுங்கள் நீங்கள் தவறு செய்திருந்தால் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். வாக்குவாதம் ஏற்படும் பொழுது நைசாக நழுவி விடுங்கள். உங்கள் மனதில் உள்ள மொத்தத்தையும் கொட்டி விடாதீர்கள் உங்கள் வெற்றியின் ரகசியங்களை மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்..
தன்னம்பிக்கையின் கதை ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர வில்லை என்றான். கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மனம் எங்கெல்லாமோ அலை பாய்கிறது. தாங்கள்தான் எனக்கொரு நல்வழி காட்டவேண்டும் என்றான். அவனுக்கு விவேகானந்தர் பதில் சொல்வதற்கு முன் ஒரு சிறு கதையைக் கூறினார். ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகையில், மூன்று ஞானிகள் நெடு நாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில்.
லயித்திருந்தனர். ஒரு நாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்து சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன் என்றார். அதற்கு மற்ற இருவரிடமிருந்தும் எந்தப்பதிலும் இல்லை. மேலும் ஆறு மாதங்கள் ஓடின. அப்போது இரண்டாவது ஞானி, அது கறுப்பு நிறக்குதிரையாக இருக்க வாய்ப்பில்லை, வெள்ளை குதிரை என்று நினைக்கிறேன் என்றார். இவரின் வாதத்துக்கும் மற்ற இருவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இன்னும் ஆறு மாதங்கள் கடந்தன. கொஞ்சம் சும்மா இருக்க மாட்டீங்களா? இப்படியே நீங்கள் வளவளவென்று பேசிக் கொண்டு இருந்தால் நான் வேறு எங்காவது போய் என் தியானத்தை தொடர்கிறேன் என்று கோபப்பட்டார் மூன்றாவது ஞானி. இந்த மூன்று ஞானிகளும், 'கண்களை மூடி தியானிப்பதற்கு பதில், மனதை மூடி தியானித்திருந்தால் இறைவனை அடைந்திருக்க முடியும்.'.
அதுவே உண்மையான தியானம். பிறகு விவேகானந்தர் இளைஞனின் கேள்விக்கு பதில் கூறினார். மனஅமைதி பெற சிறந்த வழி சுயநல மற்ற பொதுசேவையில் ஈடுபடுவது தான் என்கிறார். உன் வீட்டை சுற்றி வசிப்பவர்களின் ஏழைகள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய். கவனிப்பின்றி கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்! பிறருக்கு செய்யும் சேவையில் தான் உண்மையான மன திருப்தி இருக்கிறது. மனதில் திருப்தி இருந்தால், அங்கே நிம்மதியும், அமைதியும் குடி கொள்ளும். இதை நீ உணராவிட்டால் உன்னால் நிச்சயம் தியானம் செய்ய முடியாது. உன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டுதான் இருக்கும் என்று இளைஞனுக்கு போதித்தார் விவேகானந்தர். தன்னம்பிக்கையின் கதை.
பல முறை யோசிக்கனும் நரி ஒன்று தாகத்தால் தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்வது? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது. 'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால் தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?' நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது..
கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அங்கு நரி இருப்பதைக் கண்டது. "அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது. "நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது. "நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய்.! ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்..
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்! நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா? அடுத்தவன் ஞானியிடம் சொன்னான், நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன? ஞானி சிரித்தார்!! முதல் ஆளிடம், "நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா, "என்றார். இரண்டாமவனிடம், நீ போய் இந்த கோணி.
நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான்... அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். இப்போது ஞானி சொன்னார், "சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டு விட்டு வாருங்கள்," என்றார். முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன், இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?" என்று கேட்டான். ஞானி சொன்னார், முடியாதல்லவா, அவன் பெரிய தவறு.
செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு மீட்சி சுலபம். உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்! சிறு துளிகள்!! பெரும் வெள்ளம்.
மரியாதை ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது செருப்பு பிஞ்சுபோச்சு. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து... ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார். அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல் வந்தரைப் பார்த்து. ஐயா.. " நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..!.
எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க" என்று சொன்னார். சில ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடமே சென்று. ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச் செல்ல முடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர். அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..
ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க" என்றார். உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரை தான் ஒரு மனிதனுக்கு மரியாதை. கிடைக்கும்..