தமிழா் மரபு_PPT- unit 1

Published on Slideshow
Static slideshow
Download PDF version
Download PDF version
Embed video
Share video
Ask about this video

Scene 1 (0s)

தமிழர் மரபு Heritage of Tamil Syllabus Unit 1.

Scene 2 (7s)

அலகு - 1 மொழி மற்றும் இலக்கியம். இந்திய மொழிக் குடும்பங்கள் – திராவிட மொழிகள் - தமிழ் ஒரு செம்மொழி - தமிழ் செவ்விலக்கியங்கள் - சங்க இலக்கியத்தின் சமயச் சார்பற்ற தன்மை – சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம் – திருக்குறளில் மேலாண்மைக் கருத்துகள் - தமிழ்க் காப்பியங்கள் , தமிழகத்தில் சமண பௌத்த சமயங்களின் தாக்கம் – பக்தி இலக்கியம் , ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் - சிற்றிலக்கியங்கள் - தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி – தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் பங்களிப்பு.

Scene 3 (23s)

அலகு – 2 மரபு – பாறை ஓவியங்கள் முதல் நவீன ஓவியங்கள் – சிற்பக் கலை.

Scene 4 (39s)

அலகு – 3 நாட்டுபுறக் கலைகள் மற்றும் வீர விளையாட்டுகள்.

Scene 5 (50s)

அலகு – 4 தமிழர்களின் திணைக் கோட்பாடுகள். தமிழகத்தின் தாவரங்களும் , விலங்குகளும் – தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தில் அகம் மற்றும் புறக் கோட்பாடுகள் – தமிழர்கள் போற்றிய அறக்கோட்பாடு – சங்ககாலத்தில் தமிழகத்தில் எழுத்தறிவும் , கல்வியும் – சங்ககால நகரங்களும் துறைமுகங்களும் – சங்ககாலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடல்கடந்த நாடுகளில் சோழர்களின் வெற்றி.

Scene 6 (1m 2s)

அலகு – 5 இந்திய தேசிய இயக்கம் மற்றும் இந்திய பண்பாட்டிற்குத் தமிழர்களின் பங்களிப்பு.

Scene 7 (1m 15s)

அலகு - 1 மொழி மற்றும் இலக்கியம். மொழி “ மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை ” - வரதராசன் . மு . மக்களின் செய்தித்தொடர்புக்கும் அறிவு வளர்ச்சிக்கும் மொழி இன்றியமையாத கருவி ஆகும் . மொழியின் வழியாகவே முன்னோர்களின் அறிவுச் செய்திகளும் அறச்செய்திகளும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன ..

Scene 8 (1m 28s)

மொழி குறித்த கருத்துகள். சபீர் (1921) “ இயல்பாக ஒலிக்கக் கூடியதும் , பேச்சொலிகளின் மூலமாகத் தன்னகத்தே தோன்றக்கூடிய கருத்துகளையும் உணர்வுகளையும் , அசைவுகளையும் வெளிப்படுத்துவதும் மொழி ” நோம் சாம்ஸ்கி (1957) “ மொழியானது வாக்கியத் தொடர்களின் அமைப்பாகும் என்றும் , ஒவ்வொரு தொடர்களும் மொழிக் கூறுகளின் தொகுப்பினை உடையதாகும் ”.

Scene 9 (1m 40s)

இந்திய மொழி க்குடும்பங்கள். இந்தோ ஆரிய மொழிக ள் திராவிட மொழிக ள் ஆஸ்திரோ ஆசிய மொழிக ள் சீன திபெத்திய மொழிக ள்.

Scene 10 (1m 50s)

திராவிட மொழிகள். திராவிட மொழிகள் மூன்று பெரும் பிரிவாகப் பிரிப்பர் . அவை , 1. தென்திராவிட மொழிகள் 2. நடுத்திராவிட மொழிகள் 3. வடதிராவிட மொழிகள்.

Scene 11 (2m 0s)

தென் திராவிட மொழிகள். தமிழ் மலையாளம் கன்னடம் குடகு துளு தோடா கோத்தா கொரகா இருளா.

Scene 12 (2m 9s)

நடுத்திராவிட மொழிகள். தெலுங்கு கூயி கூவி கோண்டா கோலாமி நாயக்கி பெங்கோ மண்டா பர்ஜி கதபா கோண்டி கோயா.

Scene 13 (2m 18s)

வடதிராவிட மொழிகள். குருக் மால்தோ பிராகூய்.

Scene 14 (2m 25s)

Brahui Gondi Kolami—A d Telugu Tulu Kodava Tamil Malayalam Malto Parji Kui adaba.

Scene 15 (2m 31s)

உலகச் செம்மொழிகள். கிரேக்க ம் இலத்தீன் சமஸ்கிருதம் சீனம் எபிரேயம் ( ஹீப்ரு ) தமிழ்.

Scene 16 (2m 38s)

செம்மொழித் தகுதிகள். 1. தொன்மை 2. பிற மொழித் தாக்கமி ல்லாத் தனித்தன்மை 3. தாய்மைத் தன்மை 4. தனித்தன்மை 5. இலக்கிய வளமும் இலக்கணச் சிறப்பும் 6. பொதுமைப் பண்புகள் 7. நடுவுநிலைமை 8. பண்பாடு , கலை பட்டறிவின் வெளிப்பாடு 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு 11. மொழிக் கோட்பாடு.

Scene 17 (2m 54s)

செவ்வியல் தகுதிகளில் குறிப்பிடத்தக்கவை தாய்மை – பல மொழிகள் தோன்றுவதற்குத் தமிழ் மொழி தாயாக இருந்திருக்கிறது . தொன்மை – தமிழில் கிடைக்கின்ற முதல் நூலான தொல்காப்பியம் 250 – க்கும் மேலான இடங்களில் என்மனார் , மொழிமனார் , என்ப , மொழிப என்று குறிப்பிடுகிறது . எனவே தொல்காப்பியத்திற்கு முன்னரே சில பத்து இலக்கண நூல்களும் , நூற்றுக்கணக்கான இலக்கிய நூல்களும் இருந்திருக்க வேண்டும் . பிற மொழித் தாக்கமின்மை – அரசியல் , சமயம் , வணிகம் போன்றவற்றால் பிறமொழித் தாக்கம் தமிழில் ஏற்பட்டும்கூட தமிழ்மொழியானது தனித்து இயங்கும் தன்மையுடன் இருந்து வருகிறது ..

Scene 18 (3m 13s)

உயர்சிந்தனை யாதும் ஊரே யாவரும் கேளீர் ( ஐ.நா . சபை ) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ( திருக்குறள் -972) உண்பது நாழி உடுப்பவை இரண்டே ( புறநானூறு , பா . 189) உண்டாலம்ம இவ்வுலகம் ( புறநானூறு , பா.182) பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் ( கலித்தொகை , நெய்தல்கலி.பா.133).

Scene 19 (3m 28s)

இலக்கண வளமை. தொல்காப்பியம் / பிறப்பியல் / மெய்ப்பாட்டியல் / மரபியல் ( ஆறறிவுப் பாகுபாடு ) வினைச்சொல் கட்டமைப்பு / வினைமுற்று விகுதிகள் திணை / பால் / எண் / இடம் / காலம்.

Scene 20 (3m 38s)

தமிழ்ச் செவ்விலக்கியங்கள். தொல்காப்பியம் - 1 எட்டுத்தொகை - 8 பத்துப்பாட்டு -10 பதினெண் கீழ்க்கணக்கு -18 சிலப்பதிகாரம் - 1 மணிமேகலை - 1 இறையனார் களவியலுரை - 1 முத்தொள்ளாயிரம் - 1 41.

Scene 21 (3m 48s)

சங்க இலக்கியத்தின் சமயச் சார்பற்ற தன்மை - 1. சங்க இலக்கியங்களில் சமயங்கள் குறித்த செய்திகள் தலைமை நிலையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை . மாறாகத் தெய்வங்களை நட்பு நிலையில் வைத்துப் போற்றியிருப்பதைத் தெளிவாக அறிய முடிகிறது ..

Scene 22 (3m 59s)

சங்க இலக்கியத்தின் சமயச் சார்பற்ற தன்மை - 2. வழிபாடு வேறு சமயம் வேறு வழிபாடு – வரைமுறை இல்லை சமயம் – கடவுள் , கோயில் , இலக்கியம் உள்ளன 1. வழிபாடு 2. கொற்றவை வழிபாடு 3. நடுகல் வழிபாடு 4. வேலன் வெறியாட்டு.

Scene 23 (4m 11s)

சங்க இலக்கியத்தின் சமயச் சார்பற்ற தன்மை - 3. திருக்குறளில் கடவுள் வாழ்த்து கடவுளரின் தன்மை குறித்து மட்டுமே பேசப்பட்டுள்ளது . பெயர்கள் கூறப்படவில்லை . ( மலர்மிசை ஏகினான் , எண்குணத்தான் ) சிலப்பதிகாரத்தின் தொடக்கம் இயற்கை வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது . திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும்.

Scene 24 (4m 24s)

சங்க இலக்கியத்தின் சமயச் சார்பற்ற தன்மை - 4. சங்கப் பாடல்கள் என எட்டுத்தொகை , பத்துப்பாட்டு , போன்ற நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டிருக்கவில்லை . ( தற்போது கிடைக்கும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டவை ஆகும் .) சமண இலக்கியமாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில் சிவன் , திருமால் , அருகன் , கொற்றவை , ஐயை என அனைத்துத் தெய்வங்களையும் குறித்து எவ்விதமான வெறுப்புணர்ச்சியின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது ..

Scene 25 (4m 40s)

சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம். கொடை வாய்மை அறம் கூறவையம் அரசியல் அறம் வணிக அறம் போர் அறம்.

Scene 26 (4m 48s)

திருக்குறளில் மேலாண்மை. மேலாண்மை என்பதற்கு ஓர் அமைப்பு , துறை , நிறுவனம் முதலியவற்றில் கட்டுப்படுத்துதல் , கண்காணித்தல் , பராமரித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய செயல்பாடு என க்ரியாவின் தற்காலத் தமிழ்அகராதி பொருள் உரைக்கின்றது . ஒரு தனி நபரோ , ஒரு குழு சார்ந்த தனி நபர்களோ ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியினைக் கருத்தில்கொண்டு ஆய்ந்தறிந்த முடிவுகளைத் திட்டமிடுவதோடு அவற்றைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதும் பொதுவாக மேலாண்மை எனப்படுகிறது ..

Scene 27 (5m 4s)

மேலாண்மைத் துறையில் புகழ்பெற்ற வல்லுநரான பீட்டர் டிரக்கர் (Peter F. Drucker) நவீன நிறுவனங்களில் மேலாண்மை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக அமைகின்றது . இந்த அங்கத்தின் செயல்பாட்டைப் பொறுத்தே நிறுவனத்தின் நிலைப்பாடும் மேம்பாடும் அமையும் என்று மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார் . மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் மேலாண்மை இயக்குநர் என்பவரின் தலைமையின்கீழ் இயக்கப்படுகின்றது . ஒரு தொழில் நிறுவனத்தின் சிறந்த வளர்ச்சி அதன் தலைமையின் ஆளுமைத் திறத்தின் அடிப்படையில் அமைகிறது . அதனால் தான் ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரின் பணிகள்குறித்து இன்றைய நவீன மேலாண்மை சிந்தனையாளர்களான லூதர் குளிக் (Luther Gulick ), நவீன மேலாண்மையியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்றி ஃபாயல் (Henry Fayol ), லிண்டால் அர்விக் ( Lyndall Urwick ) ரால்வ் டேவிஷ் (Ralph Davis) E.F.L பிரச் ((E.F.L. Brech ) கூன்ஸ் ரூ ஓடோனல் (Koontz and O’ Donnell) போன்றோர் பல்வேறு வகையில் கருத்துரைத்துள்ளனர் ..

Scene 28 (5m 32s)

இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்தின் திட்டமிடல் , ஒழுங்கமைவு , ஒருங்கிணைப்பு , கட்டுப்படுத்தல் , பணியாளர் நியமனம் , வழிநடத்துதல் , ஊக்கப்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கியுள்ளனர் . இதில் லூர்தர் குளிக் (Luther Gulic ) எனும் நவீன மேலாண்மை அறிஞரின் நிர்வாகப் பணிகள் குறித்த ‘POSDCORB’ எனும் மேலாண்மைச் சிந்தனைகளைத் திருக்குறளில் பொருத்தி ஆராய்வதாக பின்வரும் பகுதி அமைகின்றது . ‘POSDCORB’ எனும் நவீன மேலாண்மைச் சிந்தனை திட்டமிடல் – Planning (P) ஒழுங்கமைவு – Organising (O ) பணியமர்தல் – Staffing (S) வழிநடத்துதல் – Directing (D) ஒருங்கிணைத்தல் – Co.ordinating (CO) முறைப்படி எடுத்துரைத்தல் – Reporting (R) வரவுசெலவுத் திட்டமிடல் – Budgeting (B).

Scene 29 (5m 51s)

திட்டமிடல் – Planning (P). ‘ எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு ’ ( குறள் : 467) ‘ அழிவதூம்உம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் ’ ( குறள் : 461) பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் ’ ( குறள் : 675).

Scene 30 (6m 4s)

ஒழுங்கமைவு – Organising (O). ‘ ப டைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு ’ ( குறள் : 381) பணியமர்தல் – Staffing (S) ‘ வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் ’ ( குறள் : 471) ‘ இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல் ’ ( குறள் : 517) வழிநடத்துதல் – Directing (D) ‘ அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு ’ ( குறள் : 382) தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு ’ ( குறள் : 383) காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் ’ ( குறள் : 386).

Scene 31 (6m 23s)

ஒருங்கிணைத்தல் – Co.ordinating (CO) ‘ தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் ’ ( குறள் : 462) பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் ’ ( குறள் : 528) முறைப்படி எடுத்துரைத்தல் – Reporting (R) தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு ( குறள் : 634) சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து ’ ( குறள் : 645) கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் ’ ( குறள் : 643) வரவுசெலவுத் திட்டமிடல் – Budgeting (B) இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு ’ ( குறள் : 385) ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை ’ ( குறள் : 478) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் ’ ( குறள் : 479).

Scene 32 (6m 47s)

தமிழ்க் காப்பியங்கள். காப்பியம் காப்பு + இயம் = காப்பியம் ஆகியது. பழமரபுகளைக் குறிப்பாக இலக்கண மரபுகளைக் காத்து நிற்பது காப்பியம் பெருங்காப்பியம் அறம் , பொருள் , இன்பம் , வீடு என்பனவற்றோடு ஓர் ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. சிறு ங் காப்பியம் நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்..

Scene 33 (7m 5s)

ஐம்பெருங் காப்பியங்கள். முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் , மணிமேகலை , குண்டலகேசி , வளையாபதி , சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்..

Scene 34 (7m 18s)

ஐஞ்சிறு காப்பியங்கள். நீலகேசி சூளாமணி யசோதர காவியம் நாககுமார காவியம் உதயணகுமார காவியம்.

Scene 35 (7m 27s)

ஐம்பெருங் காப்பியங்கள் சிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் நீலகேசி · சூளாமணி யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சைவக் காப்பியங்கள் பெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் · வைணவக் காப்பியங்கள் கம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம் சமணக் காப்பியங்கள் சீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி · பௌத்தக் காப்பியங்கள் மணிமேகலை · குண்டலகேசி ·.

Scene 36 (7m 44s)

இசுலாமியப் பெரும் காப்பியங்கள் கனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · முகைதீன் புராணம் · நவமணி மாலை · இசுலாமியச் சிறு காப்பியங்கள் மிகுராசு மாலை கிறித்தவக் காப்பியங்கள் தேம்பாவணி , இயேசு காவியம் தமிழின் தற்காலக் காப்பியங்கள் பாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் ஈழத்துக் காப்பியங்கள் கண்ணகி வழக்குரைக் காவியம்.

Scene 37 (7m 57s)

தமிழகத்தில் சமண பௌத்த சமயங்களின் தாக்கம். 1. நிலையாமை ( யாக்கை , செல்வம் , உலகம் ) 2. கொல்லாமை 3. கள்ளுண்ணாமை 4. துறவறம் 5. பிறவிச் சுழற்சிக் கொள்கை மேற்கண்ட கருத்துகள் சங்க இலக்கியத்தில் தொடங்கிப் பதினெண் கீழ்க்கணக்கில் வளர்ந்து காப்பியங்களில் முழமையடைந்தது ..

Scene 38 (8m 11s)

சைவ சமயம் - சிவன் - பன்னிரு திருமுறைகள் - நாயன்மார்கள்.

Scene 39 (8m 23s)

எட்டாம் திருமுறை திருவாசகம் , திருக்கோவையார் – மாணிக்கவாசகர் ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் பாடியவை பத்தாம் திருமுறை திருமந்திரம் - திருமூலர் பதினொன்றாம் திருமுறை தொகுப்பு – காரைக்கால் அம்மையார் உள்பட பன்னிருவர் பாடிய பாடல்கள் பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் புராணம் – சேக்கிழார் ( பெரிய புராணம் ).

Scene 40 (8m 36s)

வைணவ சமயம் – திருமால் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் – பன்னிரு ஆழ்வார்கள்.

Scene 41 (9m 1s)

சிற்றிலக்கியங்கள். அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நூற்பயனுள் ஏதேனும் ஒன்று குறைந்து வந்தாலோ , ஏதேனும் ஒன்றை மட்டும் பாடியிருந்தாலோ அவை சிற்றிலக்கியம் என்றழைக்கப்படுகின்றன . அளவில் சிறியதாகவும் , அகம் , புறம் , பக்தி மற்றும் பிற பொருள்களில் ஏதேனும்ஒன்றைப் பற்றி மட்டும் பாடப்படுவதும் சிற்றிலக்கியமாகும் . சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கைப் பொதுவாக 96 என்று குறிப்பிடப்படுகிறது . இவற்றுள் , ஆற்றுப்படை , அந்தாதி , கோவை , உலா , பள்ளு , பிள்ளைத்தமிழ் , பரணி தூது , கலம்பகம் , குறவஞ்சி முதலிய சிற்றிலக்கிய வகைகள் குறிப்பிடத்தக்கவையாகும் ..

Scene 42 (9m 21s)

ஆற்றுப்படை பரிசில் பெற்ற புரவலர் ஒருவர் , பரிசில் பெற விரும்பு ஒருவரை ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை தொல்காப்பியம் , சங்கஇலக்கியத்தில் தோன்றி கி.பி 20 நூற்றாண்டு வரை வளர்ந்து தற்போது பெருமளவை எட்டியுள்ளது . சான்று : பத்துப்பாட்டு அந்தாதி அந்தாதி என்பது நூலில் ஒவ்வொரு பாடலிலுள்ள இறுதி எழுத்து , அசை , சொல் , சீர் , அடி ஏதேனும் ஒன்று அதற்கடுத்து முதலடியாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி சான்று : அற்புதத் திருவந்தாதி ( முதல் ) கோவை தமிழ் இலக்கணத்தில் ஓர் கூறாகிய அகப்பொருள் இலக்கணமாகிய அனைத்துத் துறைகளிலும் நிரல்பட கோர்த்து , கற்பனைச் செறிவுடன் பாடப்படும் ஒரு வகை அகப்பொருள் சிற்றிலக்கியமே கோவை எனப்படும் சான்று : திருக்கோவையார் , பாண்டிக்கோவை ( முதல் ).

Scene 43 (9m 44s)

உலா இறைவனின் திருவுருவோ , உலகம் போற்றும் பெருமகனோ , அரசனோ , கரி , தேர் , பரி ஆகியவற்றுள் ஏதேனும் ஓர் ஊர்தியில் பவனி வரும்போது பேதை , பெதும்மை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம் பெண் ஆகிய எழுபருவ மகளிரும் தலைவனைக் கண்டு காதல் கொண்டு பாடப்பெற்ற ஒரு வகை சிற்றிலக்கியமே உலா எனப்படும் . சான்று : திருக்கைலாய ஞான உலா ( முதல் ) கலம்பகம் ( கலம் (12) + பகம் (16)) கலம்பகம் – கலவை என்று பொருள் பல்வேறு வகை செய்யுள்களும் அகப்பொருள் , புறப்பொருள் கூறுபாடுகளும் நிறைந்து நகை , பெருமிதம் , வெகுளி முதலான பல்சுவைகளும் செறிந்த ஒரு வகை சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும் . சான்று : நந்தி கலம்பகம் ( முதல் ) பள்ளு மருத நில மக்களின் வாழ்க்கையை விரித்துரைப்பது பள்ளு இலக்கியமாகும் . சான்று : முக்கூடற் பள்ளு ( முதல் ).

Scene 44 (10m 11s)

பிள்ளைத்தமிழ் இறைவனையோ , அரசனையோ , பாட்டுடைத் தலைவனையோ , பாட்டுடைத் தலைவியையோ குழந்தையாக எண்ணிப் போற்றி பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பாடுவது பிள்ளைத்தமி இலக்கியமாகும் . இரண்டு வகைப்படும் 1. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் , 2. பெண்பாற் பிள்ளைத்தமிழ் . காப்பு செங்கீரை , தால்,சப்பாணி , முத்தம் , வருகை , அம்புலி , சிற்றில் , சிறுதேர் , சிறுபறை ( அம்மானை , நீரால் , ஊசல் ) சான்று : குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் பரணி போர்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரன் ஒருவனின் மீது பாடப்படுவது பரணி இலக்கியம் சான்று : கலிங்கத்துப் பரணி தூது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குத் தெரிவிக்க இடையே பிரிதொருவரை அனுப்புவது தூது எனப்படும் . சான்று : நெஞ்சுவிடு தூது குறவஞ்சி பாட்டுடைத் தலைவனை அவனது உலாவின்போது கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்திக்கு குலகுறத்தி குறிச் சொல்வதாக அமைவது குற்வஞ்சி இலக்கியமாகும் . சான்று : குற்றாலக் குறவஞ்சி.

Scene 45 (10m 39s)

தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி. உரைநடை வடிவம் நாவல் சிறுகதை கட்டுரை நாடகம் கவிதை வடிவம் மரபுக் கவிதை புதுக் கவிதை நவீன கவிதை ஹைக்கூ கவிதை.

Scene 46 (10m 49s)

பாரதியார். கவிஞர் , எழுத்தாளர் , இதழாளர் , சமூகத் சீர்திருத்தச் சிந்தனையாளர் , விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி . சுப்பிரமணிய பாரதியார் . இந்தியா , விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் . கவிதைகள் மட்டுமன்றி , சந்திரிகையின் கதை , தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசன கவிதைகளையும் சீட்டுக்கவிதைகளையும் எழுதியவர் . சிந்துக்குத் தந்தை , செந்தமிழ்த் தேனீ , புதிய அறம் பாட வந்த அறிஞன் , மறம் பாட வந்த மறவன் என்றொல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார் . “ தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் ”.

Scene 47 (11m 10s)

தமிழ் நாட்டுணர்வு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையார் நாடென்ற பேச்சினேலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே மொழியுணர்வு யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை , வெறும் புகழ்ச்சியில்லை ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்.

Scene 48 (11m 26s)

தேசியவுணர்வு ஆ டுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பெண்ணுரிமை கும்மியடி!தமிழ் நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி ! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் ; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை கணென்று கும்மியடி ! ( கும்மி ).

Scene 49 (11m 40s)

அறிவியல் பார்வை காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் ………………………………………………………. ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் சமுதாய உணர்வு சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய வுடையவர்கள் மேலோர்.

Scene 50 (11m 54s)

பாரதிதாசன். பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம் . இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார் . பாண்டியன் பரிசு , அழகின் சிரிப்பு , இருண்ட வீடு , குடும்ப விளக்கு , தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள் . இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘ பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் ’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன . இவரது ‘ பிசிராந்தையார் ’ நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது ..